பல் தேய்க்காததால் தாய் சிறுமிக்கு செய்ய கொடூரம்! பதறவைக்கும சம்பவம்!

(UDHAYAM, USA) – அமெரிக்காவில் 4 வயது சிறுமி பல் தேய்க்காததால், ஆத்திரமடைந்த அச்சிறுமியின் தாய், சிறுமியின் வயிற்றில் உதைத்ததில் அந்தச் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில், ஐரிஸ் ஹெர்னாண்டஸ் என்பவர் தனது நோஹ்லி அலெக்ஸாண்ட்ரா என்ற 4 வயது மகளுடன் வசித்து வருகிறார். நேற்று காலை அச்சிறுமி குளியறையில் மயங்கி விழுந்ததாககூறி, அவளது தாய் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்த அச்சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அச்சிறுமியின் உடலில் பல காயங்கள்…

Read More

ஷந்திமாலுக்கு ஓய்வு

(UDHAYAM, CAPE TOWN) – சுற்றுலா இலங்கை அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான நான்காவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. கேப் டவுனில் இந்த போட்டி இடம்பெறவுள்ளது. இந்த போட்டியில் இலங்கை அணி வீரர் தினேஸ் ஷந்திமாலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு பதிலாக சந்துன் வீரகொடி அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இதுவரையில் இடம்பெற்றுள்ள மூன்று போட்டிகளிலும் தொன்னாபிரிக்க அணி வெற்றிப்பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்த…

Read More

தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் கூரை மேல் ஏறி உண்ணாவிரத போராட்டம்!

(UDHAYAM, COLOMBO) – தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதான தொழிலாளர்கள் சிலர் தற்போதைய நிலையில் மைதானத்தின் கூரைக்கு மேல் ஏறி உண்ணாவிரத போராட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர். ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 11 தொழிலாளர்கள் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டுள்ள நிலையில் , 10 வருடமாக தொழில் புரியும் எமக்கு இதுவரை நிரந்தர நியமனம் வழங்க இலங்கை கிரிக்கட் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வில்லை என தெரிவித்து இந்த உண்ணாவிர போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. தமது சேவையினை நிரந்தரமாக்கும் வரையில் தாம்…

Read More

மீண்டும் வருகிறார் மலிங்க?

(UDHAYAM, COLOMBO) – உபாதை காரணமாக நீண்ட நாட்களாக கிரிக்கட் போட்டிகளில் இருந்து விலகி இருந்த லசித் மாலிங்க தற்போது விளையாடுவதற்கான முழு உடற் தகுதியுடன் இருப்பதாக இலங்கை கிரிக்கட் மருத்துவ குழு உறுப்பினர் பேராசிரியர் அர்ஜுன் த சில்வா தெரிவித்துள்ளார். பேராசிரியர் அர்ஜுன் த சில்வா, மருத்துவ குழு பக்கம் எந்த பிரச்சனையும் இல்லை. விளையாட முடியும் என்று சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. முதலில் அவுஸ்திரேலியா அணியுடனான இருபதுக்கு 20 போட்டிகள் இருக்கின்றன. அதில் கலந்து கொள்ள…

Read More

வட இந்தியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

(UDHAYAM, NEW DELHI) – டெல்லி உட்பட வடஇந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. வடஇந்தியாவில் உத்தரகாண்ட் உட்பட பல இடங்களில் லேசான நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.8-ஆக பதிவான இந்த நிலநடுக்கம் டெல்லியிலும் உணரப்பட்டது. நேற்று இரவு சுமார் 10.33 மணிக்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. உத்தரகாண்ட் மாநிலத்தின் ருத்ரபிரயாக் மாவட்டத்தை மையமாகக் கொண்டு உருவான இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் சுமார் 33 கிலோமீட்டர் ஆழத்தில் உருவாகியதாக தேசிய நிலஅதிர்வு செயலகத்தின் தலைவர்…

Read More

அரிசியினை அதிக விலையில் விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

(UDHAYAM, COLOMBO) – நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அரிசிக்கான புதிய கட்டுப்பாட்டு விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி நாட்டரிசிக்கான அதிக்கூடிய கட்டுப்பாட்டு விலை 70 ரூபாவாகும். சம்பா அரிசியின் அதிக்கூடிய கட்டுப்பாட்டு விலை 80 ரூபாவாகும். நிதி அமைச்சின் அறிக்கை ஒன்றில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தையில் அரிசிவிலை தொடர்ச்சியாக அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அரசினால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த கட்டுப்பாட்டு விலையினை விட அதிகமான விலையில் அரிசியினை விற்பனை செய்யும்…

Read More

வெகு விரைவில் தமிழக முதல்வராக பதவி ஏறக்கவுள்ளார் சசிகலா!!

(UDHAYAM, CHENNAI) – தமிழக சட்ட மன்ற குழு தலைவராக அண்ணா திராவிட முன்னேறக் கழகத்தின் பொதுச் செயலாளர் சசிகலா நியமிக்கப்பட்டுள்ளமையானது, மக்களினதும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொள்கைக்கும் விரோதமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சி தலைவர் மு.கா ஸ்டாலின் இதனை தெரிவித்துள்ளார். சசிகலாவின் தெரிவு நியாயமற்றது அது ஜனநாயகத்திற்கு விரோதமானது எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். தமிழக சட்ட மன்ற குழு தலைவராக அண்ணா திராவிட முன்னேறக் கழகத்தின் பொதுச் செயலாளராக நேற்று சசிகலா தெரிவு செய்யப்பட்டார். இந்த…

Read More

சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட புதியதோர் தேசத்தில் சமாதானமும் சுபீட்சத்துடனும் வாழும் பாக்கியம் எமக்கு கிட்ட வேண்டும் – ஜனாதிபதி

(UDHAYAM, COLOMBO) – நீதி மற்றும் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட புதியதோர் தேசத்தில் சமாதானமும் சுபீட்சமும் கிடைக்கப்பெற்ற மக்களாக வாழும் பாக்கியம் எமக்கு கிட்ட வேண்டும் என்று 69ஆவது சுதந்திர தினத்தையிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது: மனிதர்கள் தமது சுதந்திரத்திற்காக மேற்கொண்ட போராட்டங்களினால் மானுட வரலாறு அழகு பெற்றுள்ளது. இலங்கையரான நாமும் அவ்வாறான பெருமைமிகு சுதந்திரப் போராட்ட வரலாற்றுக்கு உரித்துடையவர்களே….

Read More