இலங்கைக்கு வந்துள்ள IMF பிரதிநிதிகள் குழு!

(UTV | கொழும்பு) – சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கை வந்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று முதல் ஒரு வார காலம் நாட்டில் தங்கியிருந்து கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நிதியமைச்சு, மத்திய வங்கியின் பிரதிநிதிகள் மற்றும் பல தரப்பினருடன் பிரதிநிதிகள் கலந்துரையாடவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதியைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் இந்த நாட்டின் பொருளாதார…

Read More

நாட்டில் கடுமையாகும் சட்டம்!

(UTV | கொழும்பு) – மத போதனைகளை திரிபுபடுத்தும் மற்றும் சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் செயல்களை தடுக்கவும் அகற்றவும் சட்டத்தை கடுமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, புதிய சட்டங்களை இயற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். மத உண்மைகளை திரித்து நபர் ஒருவர் செய்த பிரசங்கங்களை தொடர்ந்து தானும் அவரைப் பின்பற்றியவர்களும் உயிரை மாய்த்துக் கொண்டதாக அமைச்சர் கூறினார். சமூகத்தை சீர்குலைக்கும் நபர்களின் மத நம்பிக்கைகள்…

Read More

கணிசமாகக் குறைவடையும் நாட்டின் சனத்தொகை!

(UTV | கொழும்பு) – எதிர்வரும் காலங்களில் நாட்டின் சனத்தொகை கணிசமாகக் குறையலாம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகக் கற்கைகள் பேராசிரியர் இந்திரலால் டி சில்வா தெரிவித்துள்ளார். பல காரணிகள் இதனை பாதித்துள்ளதாக பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.இலங்கையில் பிறப்பு வீதம், 25 வீதம் குறைவடைந்துள்ளமை பிரதான காரணங்களில் ஒன்று என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூக கற்கைகள் பேராசிரியர் இந்திரலால் டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார். “நம் நாட்டில் ஆண்டு பிறப்புகளின் எண்ணிக்கை மிக வேகமாக குறைந்து வருகிறது. உதாரணமாக, 2013…

Read More

புதுவருடத்தில் 25,000 பயணிகள் நாட்டுக்கு வருகை!

(UTV | கொழும்பு) – இந்த வருடத்தின் முதல் 04 நாட்களில் மாத்திரம் 25,000 இற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் 4 ஆம் திகதி வரையில் மாத்திரம் 25,619 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதில் அதிகளவான சுற்றுலான பயணிகளான 5,060 பேர், ரஷ்யாவிலிருந்து வந்துள்ளதுடன், 3,333 சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். மேலும்,…

Read More

மியன்மார் பயங்கரவாதிகளின் பிடியிலுள்ள இலங்கையர்களை விடுவிக்க நடவடிக்கை!

(UTV | கொழும்பு) – மியன்மார் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள இலங்கையர்களின் விடுதலைக்கு ஒத்துழைப்பு வழங்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் ஜனக பிரியந்த பண்டார இதனைக் குறிப்பிடுகிறார். ஜனக பிரியந்த பண்டார மற்றும் மியன்மார் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Read More

“7 ஒரே தற்கொலை” போதகரினால் இலங்கையில் எழும் சர்ச்சை

(UTV | கொழும்பு) – கடந்த சில நாட்களில் பதிவாகிய ஏழு சந்தேகத்திற்கிடமான மரணங்கள் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளன. ருவன் பிரசன்ன குணரத்ன என்ற நபரின் போதனைகளுக்கு ஆளான நபர்கள் தங்கள் வீடுகளில் இருந்தால் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். குணரத்ன அண்மையில் ஹோமாகமவில் விஷம் அருந்தி உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டார். தத்துவ போதகரான ருவானுடன் நெருங்கிய தொடர்புடைய…

Read More

அரசு ஊழியர்களுக்கு விசேட விடுமுறை!

(UTV | கொழும்பு) – நடப்பாண்டின் செப்டம்பர், ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பல்வேறு பேரிடர்களால் வேலைக்குச் செல்ல முடியாத அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு, பல்வேறு மாகாணங்களில் மழை, வெள்ளம், மண்சரிவு, வீதித் தடைகள் போன்றவற்றால் ஏற்படும் போக்குவரத்து சிரமங்கள், இடப்பெயர்வுகள் மற்றும் அனர்த்தங்கள் காரணமாக தமது கடமை நிலையங்களுக்குத் செல்ல முடியாத அரச உத்தியோகத்தர்கள் இந்தச் சலுகையைப் பெறுகின்றனர்.   இந்த விடுமுறையை பெற்றுக் கொள்வதற்காக…

Read More

விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கில் திரண்ட மக்கள்!

(UTV | கொழும்பு) – நேற்றைய தினம் இறையடி சேர்ந்த தேமுதிக தலைவரும், நடிகருமாக விஜயகாந்த் அவர்களின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நண்பகல் 1 மணிக்குப் பின்னர் பூந்தமல்லி சாலை வழியாக அவரது உடல் கொண்டு செல்லப்பட்டு, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே வேளை லட்சக்கணக்கான மக்கள் அன்னாரது பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. BE INFORMED WHEREVER YOU ARE…

Read More

VAT வரி அதிகரிப்பால் ஏற்படும் தாக்கம் – தனுஜா பெரேரா

(UTV | கொழும்பு) – பெறுமதி சேர் வரி (VAT) உள்வாங்கப்பட்டுள்ள பொருட்கள் மற்றும் சேவைகள் மீது விதிக்கப்பட்டுள்ள ஏனைய வரிகளை நீக்கி உரிய வரி மாற்றங்களைச் செய்து VAT திருத்தத்தின் தாக்கத்தை குறைப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக நிதி அமைச்சின் வரிக் கொள்கை ஆலோசகர் தனுஜா பெரேரா தெரிவித்தார். “பெறுமதி சேர் வரி (VAT) திருத்தச் சட்டம் மற்றும் அதன் தாக்கம்” என்ற தலைப்பில் நேற்று (28) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற…

Read More

அஸ்வெசும எண்ணிக்கையை அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் உத்தரவு

(UTV | கொழும்பு) – நாட்டில் அஸ்வெசும பயன்பெறுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். இதன்படி அடுத்த ஆண்டு முதல் இந்த எண்ணிக்கை 400,000 குடும்பங்களால் அதிகரிக்கப்பட்டு, 2.4 மில்லியன் குடும்பங்கள் நன்மை பெறும் என்று தெரிவிக்கப்படுகிறது. அஸ்வெசும திட்டத்துக்குள் உள்வாங்கப்படுகின்றவர்களுக்கு சிறுநீரகத் தொகுதி போன்ற நிவாரணங்களும் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகளுக்காக வரவு செலவு திட்டத்தின் ஊடாக 207 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது BE INFORMED WHEREVER YOU…

Read More