5 விக்கட்டுக்களால் இலங்கை அணி வெற்றி

(UTV|COLOMBO)-இலங்கை மற்றும் சிம்பாவே  அணிகளுக்கிடையில் இடம்பெற்ற முக்கோண ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் 4ஆவது போட்டியில் இலங்கை அணி 5 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. பங்களாதேஷில் நடைபெற்றுவரும் முத்தரப்பு போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாவே அணி 44 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 198 ஓட்டங்களை பெற்றது. இலங்கை அணி 44.5 ஓவர்கள் முடிவில் 5 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து 202 ஓட்டங்களை பெற்று 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.     [alert color=”faebcc” icon=”fa-commenting”]…

Read More