அணுவாயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வௌியேறியது
(UTV|AMERICA)-ஈரான் அணுவாயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வௌியேறியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா காலத்தில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார். குறித்த ஒப்பந்தம் சிதைவடைந்த மற்றும் அழிந்துகொண்டிருக்கும் ஒன்றென விமர்சித்துள்ள ட்ரம்ப் அமெரிக்க பிரஜையென்ற அடிப்படையில் தமக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் ஒன்றென குறிப்பிட்டுள்ளார். அணுசக்தி நடவடிக்கைகளுக்கு எதிரான தடைகளை நீக்குவதற்கு மாற்றீடாக அணுசக்தி நடவடிக்கைகளை மட்டுப்படுத்துவது தொடர்பான மேற்குலக நாடுகளுடனான ஒப்பந்த்தில் ஈரான் கடந்த 2015 இல்…