அரச முகாமைத்துவ சேவையில் புதிதாக மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வருடத்தில் இணைப்பு

(UDHAYAM, COLOMBO) – அரச முகாமைத்துவ சேவையில் இந்த வருடத்தில் புதிதாக மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். எதிர்வரும் 22ம் 23ம் திகதிகளில் இதற்கான போட்டிப் பரீட்சை நடத்தப்படவிருப்பதாக அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை இதற்காக ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். அனைத்து பரீட்சார்த்திகளுக்குமான பரீட்சை அனுமதி அட்டை தற்பொழுது அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்தார். இரண்டு மாத காலப்பகுதிக்குள் இதற்கு நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டு…

Read More

இணையதளத்தில் கசிந்த ‘காலா’ – வீடியோ இணைப்பு

(UDHAYAM, COLOMBO) – ரஜினி நடிக்கவிருக்கும் ‘காலா’ படத்தின் அறிமுக பாடல் இணையதளத்தில் கசிந்துள்ளது. ரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிவரும் ‘காலா’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. படப்பிடிப்பு தொடங்கியது முதல் இப்படத்தின் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன. இதை படக்குழுவினர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்நிலையில், இப்படத்தில் ரஜினியின் அறிமுக பாடல் 1 நிமிட வீடியோ தற்போது இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளது. இந்த பாடலில் ரஜினி பேசும் வசனமும் அடங்கியுள்ளது. எதிரி…

Read More

ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணத்துக்கான இலங்கை அணி அறிவிப்பு! : முக்கிய வீரர்கள் அணியில் இணைப்பு

(UDHAYAM, COLOMBO) – இங்கிலாந்தில் எதிர்வரும் ஜுன் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பியன்ஸ் கிண்ணத்திற்கான இலங்கை அணி தலைவராக எஞ்சலோ மெத்தியுஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், உப தலைவராக உபுல் தரங்க நியமிக்கப்பட்டுள்ளார். அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாமில், இலங்கை அணியின் அனுபவ வீரர்கள் சிலர் இணைக்கப்பட்டுள்ளதுடன், புதிதாக தமது திறமைகளை வெளிப்படுத்திவரும் வீரர்களும் இணைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை அனுபவம் வாய்ந்த முக்கிய வீரர்களான திசர பெரேரா, லசித் மலிங்க, சாமர…

Read More