பணியாளர்களின் தங்க நகைகளை அடைவு வைத்து மதுவரித் திணைக்களத்திற்கு உற்பத்தி வரி

(UDHAYAM, COLOMBO) – கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் அனுமதி வழங்காததால் பணியாளர்களின் தங்க நகைகளை அடைவு வைத்து மதுவரித் திணைக்களத்திற்கு உற்பத்தி வரி செலுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் கோணாவில் போத்தல் கள் அடைப்பு நிலையத்தில், இந்த வருடம் 5 இலட்சம் போத்தல் கள் அடைக்கப்பட்டு 15 மில்லியனுக்குமேல் உற்பத்தி வரியாக மதுவரித் திணைக்களத்திற்கு செலுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் 15 நாட்களுக்கு ஒரு தடவை இந்த உற்பத்தி வரி செலுத்த வேண்டும்….

Read More

உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களை முடக்கும் முயற்சியில் அரசாங்கம் – விமல் குற்றச்சாட்டு

(UDHAYAM, COLOMBO) – வெளிநாட்டு நிறுவனங்களை இலங்கையில் நிறுவும் நோக்கில் உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களை முடக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபடுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட உரையாற்றும்போது தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச இதனை தெரிவித்தார். இலங்கையில் பாரிய அளவில் மோசடிகள் இடம்பெற்றுவருகின்றது. மோசடிக்காரர்கள் சுதந்திரமாக உள்ளனர். இவை எதனையும் கண்டுகொள்ளாமல் அரசாங்கம் சீரற்ற முறையில் செயற்பட்டுவருவதாக விமல் வீரவங்ச குற்றம் சுமத்தியுள்ளார். இந்த நிலையில், தனியார்…

Read More

பழ உற்பத்தி

(UDHAYAM, COLOMBO) – ழ உற்பத்தியை அதிகரிப்பதன் தேவையை இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. ஏற்றுமதியாளர்கள் மத்தியில் இதற்கு கூடுதலான கேள்வி நிலவிய போதிலும் நாட்டில் பழ உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது. உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு மத்தியில் நேரடி தொடர்புகளை முன்னெடுப்பதற்கும் வர்த்தக உடன்படிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தி முறையை விரிவுபடுத்துவதுமே இதற்கு தீர்வாகும் என்று மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. 2015ம் ஆண்டில் நாட்டின் பழ உற்பத்தி 15 தசம்  ஆறு சதவீதமாக வீழ்ச்சியடைந்திருந்தது. கடந்த வருடத்தில் இது…

Read More

ஜனாதிபதியினால் Celogen Lanka நிறுவனத்தின் புதிய மருந்து உற்பத்தி நிலையம் திறப்பு

(UDHAYAM, COLOMBO) – வரையறுக்கப்பட்ட Celogen Lanka நிறுவனத்தின் புதிய மருந்து உற்பத்தி நிலையம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் திறந்துவைக்கப்பட்டது. கண்டி, பல்லேக்கலயில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த உற்பத்தி நிலையம் நேற்று முற்பகல் திறந்து வைக்கப்பட்டது. வரையறுக்கப்பட்ட Celogen Lanka நிறுவனம் வருடாந்தம் 1900 மில்லியன் மருந்து வில்லைகளை உற்பத்தி செய்யும் இலங்கையிலுள்ள பாரிய மருந்து உற்பத்தி நிறுவனமாகும். இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, அமைச்சர் எஸ்.பி.நாவின்ன, பிரதி அமைச்சர் அசோக்க அபேசிங்க, மத்திய மாகாண…

Read More

விவசாய உற்பத்தி தொழில்நுட்ப உயர்; தேசிய டிப்ளோமா கற்கை நெறி

(UDHAYAM, COLOMBO) – விவசாய கல்லூரிகளின் 2018 – 2020 ஆம் ஆண்டுக்காக விவசாய உற்பத்தி தொழில்நுட்ப உயர் தேசிய டிப்ளோமா கற்கை நெறிக்கு மாணவர்களை இணைத்தக் கொள்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. வவுனியா, அங்குணுகொலபெலச கரப்பிஞ்ச குண்டசாலை, பெல்வெஹர ஆகிய விவசாய கல்லூரிகளுக்க அனுமதிகோரி 2017 ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம். கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் தோற்றி ஆகக்குறைந்தது ஒரு பாடத்திலேனும் சித்தியடைந்தவர்கள் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.

Read More

யாழ்ப்பாணம், வவுனியா அடங்னளாக 60 சமுர்த்தி உற்பத்தி முன்மாதிரிக் கிராமங்கள்

(UDHAYAM, COLOMBO) – 2017ம் ஆண்டுக்கான வறுமையை ஒழிக்கும் நிலையான அபிவிருத்தி இலக்கை அடையும் நோக்கில். நாடு பூராகவும் 60 சமுர்த்தி உற்பத்தி முன்மாதிரிக் கிராமங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. யாழ்ப்பாணம், வவுனியா போன்ற மாவட்டங்களிலும் இhற்கான  முன்மாதிரிக் கிராமங்கள் இனங்காணப்பட்டுள்ளன. இதற்கென இந்த வருடத்தில் 60 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சமுர்த்தி வங்கியின் நிதி நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான பணிப்பாளர் கே.கே.எல். சந்திரதிலக்க தெரிவித்தார். இதன் மூலம் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடையவுள்ளன. அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவின் பணிப்புரைக்கு…

Read More

கிழங்கு வகை உற்பத்தி

(UDHAYAM, COLOMBO) – காலி மாவட்டத்தில் பாரம்பரிய கிழங்கு வகை உற்பத்திக்கான வேலைத்திட்டமொன்று தென்மாகாண விவசாய அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நெற்செய்கை மெற்கொள்ளப்படாது கைவிடப்பட்ட வயற்காணிகளில் வரட்சிக்கு ஈடுகொடுக்கக்கூடிய மரவள்ளிக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகள் உற்பத்தி செய்யப்படவுள்ளன. குறித்த காணிகளில் இவ்வாகையான கிழங்கு வகைகள் உற்பத்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த உற்பத்தி நடவடிக்கைகளுக்காக விவசாய அபிவிருத்தித் திணைக்களத்தினால் உற்பத்தியாளர்களுக்குத் தேவையான வசதிகள் வழங்கப்படவுள்ளது.

Read More

தேயிலை உற்பத்தி வீழ்ச்சி

(UDHAYAM, COLOMBO) – கடந்த மாதம் இலங்கையின் தேயிலை உற்பத்தி 15.3 சதவீதத்தால் வீழ்ச்சி அடைந்திருந்ததாக தெரிவிக்கப்ப்டடுள்ளது. இலங்கை தேயிலை சபை இதனைத் தெரிவித்துள்ளது. அசாதாரண காலநிலை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. அத்துடன் பசளை முறையாக பயன்படுத்தப்படாமை மற்றும் களைக்கொல்லி தொடர்பான அரசாங்கத்தின் தடை போன்றனவும் அமைந்திருந்ததாக கூறப்பட்டுள்ளது.

Read More

டயர் மீள் உற்பத்தி தொழிற்சாலை திறப்பு

(UDHAYAM, COLOMBO) – ஹொரண தொம்பகொட பிரதேசத்தில் இலங்கை இராணுவத்தினரால் நிறுவப்பட்ட டயர் தொழிற்சாலையினை திறந்துவைக்கும் வைபவம் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா தலைமையில் நடைபெற்றது. இலங்கை இராணுவத்தினரால் இராணுவ வாகனங்களுக்கு மீள்பாவனைக்கு உட்படுத்தும் வகையில் இராணுவத்தின் நிதியுதவியின் மூலம் நிறுவப்பட்ட குறித்த தொழிற்சாலை நேற்று முன்தினம் திறந்துவைக்கப்பட்டது. இந்த டயர் தொழிற்சாலை மூலம் வருடாந்தம் சுமார் 8800 மேற்பட்ட டயர்களை மீள்உற்பத்தி செய்யும் திறன் உள்ளதுடன் குறித்த நிலையத்தினூடாக நாள் ஒன்றுக்கு…

Read More