சென்னையில் 19ஆம் திகதி முதல் மீண்டும் ஊரடங்கு

(UTV|இந்தியா )- இந்தியா – சென்னையில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், எதிர்வரும் ஜூன் 19ஆம் திகதி முதல் மீண்டும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன்படி, இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜூன் 19ஆம் திகதி முதல் ஜூன் 30ஆம் திகதி நள்ளிரவு 12 மணிவரை சென்னை, சென்னை பொலிஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் மாவட்டம் , செங்கல்பட்டு மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தின்…

Read More

ஒஸ்கர் விருது விழா ஒத்திவைப்பு

(UTV|அமேரிக்கா)- கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அடுத்த வருடம் நடைபெறவிருந்த ஒஸ்கர் விருது வழங்கும் விழா, இரண்டு மாதங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ம் திகதி நடைபெறவிருந்த ஒஸ்கர் விழா தற்போது ஏப்ரல் 25-ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதேவேளை, பிரிட்டிஷ் திரைப்பட விருது விழாவும் அடுத்த ஆண்டு ஏப்ரல் 11-ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு மூன்று முறை மட்டுமே ஒஸ்கர் விழா ஒத்திவைக்கப்பட்டது. 1938-ல் லாஸ் ஏஞ்சல்ஸ் வெள்ளத்தின் போதும்,…

Read More

இதுவரை 740 கடற்படையினர் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு)- நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 28 கடற்படை உறுப்பினர்கள் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதற்கமைய கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 740 ஆக அதிகரித்துள்ளது.

Read More

இந்தியாவில் ஒரே நாளில் 11 ஆயிரம் பேருக்கு கொரோனா

(UTV|இந்தியா)- இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்ற நிலையில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 இலட்சத்தை கடந்துள்ளது

Read More

மேலும் 33 கடற்படையினர் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 33 கடற்படையினர் குணமடைந்துள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுறு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

Read More

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|கொவிட் -19)- நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Read More

பாகிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு கொரோனா

(UTV|பாகிஸ்தான் )- பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசுப் ராஸா கிலானிக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Read More

மாலைத்தீவில் இருந்து 291 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மாலைத்தீவில் சிக்கியிருந்த 291 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL102 எனும் விமானம் மூலம் இன்று முற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ள 291 பேருக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் பி.சி. ஆர் பரிசோதனை மேற்கொள்ளபப்ட்டு, பரிசோதனை முடிவுகள் வெளியாகும் வரை கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்துள்ள 4 ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Read More

இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 3 இலட்சத்தை தாண்டியது

(UTV|கொவிட்-19)- இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது. இந்தியாவில் நேற்று மட்டும் 11,320 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் மொத்தம் 309,603 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,890 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 154,330 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 146,383 பேர் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றன. இதேவேளை, உலகம்…

Read More