“வடமாகாணம் 4 சத வீத பங்களிப்பை நல்குகின்றது” ஏற்றுமதியில் வடக்கையும் தீவிரமாக ஈடுபடுத்த திட்டங்கள் !-அமைச்சர் ரிஷாட்
(UTV|COLOMBO) கிட்டத்தட்ட 10 இலட்சம் மக்களை கொண்ட வட மாகாணம், இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நான்கு சதவீத பங்களிப்பை நல்குவதாகவும் தேசிய பொருளாதார வளர்ச்சியில் எதிர்வரும் காலங்களிலும் காத்திரமான பங்களிப்பை இந்த மாகாணம் நல்குவதற்கான திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் 2000 புதிய ஏற்று மதியாளர்களை உருவாக்கும் செயற்திட்டத்தின் கீழ் வன்னி மாவட்டத்தில் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (01) இடம்பெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில்…