பிணை முறி மற்றும் பாரிய ஊழல்கள் அறிக்கை தொடர்பான நாடாளுமன்ற விவாதம் இன்று
(UTV|COLOMBO)-மத்திய வங்கியின் பிணை முறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை மற்றும் பாரிய ஊழல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை குறித்த நாடாளுமன்ற விவாதம் இன்று இடம்பெறவுள்ளது. இன்று முற்பகல் 10.30 அளவில் ஆரம்பமாகவுள்ள சபை அமர்வு பிற்பகல் 4 மணி வரை இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் காரியாலயம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில் விவாதத்திற்கு தமது அணி தயார் என ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். இந்த விவாதத்தின் போது ஐக்கிய தேசிய கட்சி உண்மையை…