சாரதிகளுக்கான முக்கிய அறிவித்தல்
(UTV|COLOMBO)-கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக சாலையின் களனி பாலத்திற்கு அருகில் களனி மற்றும் வத்தளை பகுதிகளில் வாகனங்கள் வௌியேறுவதற்காக பயன்படுத்தப்படும் வீதியை இம்மாதம் 10ம் திகதி தொடக்கம் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. பரிந்துரைக்கப்பட்டுள்ள புதிய களனி பாலத்தின் கட்டுமானப்பணிகளுக்காக இந்த வீதி மூடப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதற்கு பதிலாக மாற்றுவீதிகளை அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. அதன்படி , கட்டுநாயக்க அதிவேக வீதியில் இருந்து களனி மற்றும் பெஹலியகொடை நோக்கி பயணிப்பதற்காக பெஹலியகொடை வௌியேறும்…