இலங்கை வலைப்பந்தாட்ட அணி தென்கொரியா பயணம்

(UDHAYAM, COLOMBO) – 10 ஆவது தெற்காசிய இளையோர் வலைப்பந்தாட்டப் போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை வலைப்பந்தாட்ட அணி தென்கொரியா பயணமானது. தென்கொரியாவின் ஜியொன்ஜு விளையாட்டு மைதானத்தில் எதிர்வரும் 7ம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்த போட்டியில் இலங்கை அணி ஏ பிரிவில் போட்டியிடவுள்ளது. ஆசிய பிராந்தியத்தைச் சேர்ந்த 10 நாடுகள் கலந்து கொள்ளவுள்ள இந்த போட்டி 14ம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது. இலங்கை அணி முதல் சுற்றில் தாய்லாந்து, மாலைதீவு, பாகிஸ்தான் மற்றும் ஹொங்கொங் அணிகளுடன்  போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

அவுஸ்ரேலியா வலைப்பந்தாட்ட அணியில் தர்ஜினி சிவலிங்கம்

(UDHAYAM, COLOMBO) – உலகில் சிறந்த வலைப்பந்தாட்ட வீராங்கனையும், ஆசியாவில் உயரம் கூடிய வலைப்பந்தாட்ட வீராங்கனையுமான தர்ஜினி சிவலிங்கத்திற்கு அவுஸ்ரேலியா வலைப்பந்தாட்ட குழுவில் விளையாடுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. சர்வதேச அணியில் விளையாடுவதற்கு இலங்கை வலைப்பந்தாட்ட வீராங்கனைக்கு கிடைத்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். அவுஸ்ரேலிய வலைப்பந்தாட்ட அணியில் இலங்கை வீராங்கனை ஒருவர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றவதற்கு வழங்கப்பட்டுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் . இதற்கமைவாக தர்ஜினி அவுஸ்ரேலியா சிற்றி வெஸ்ற் பெல்கென்ஸ் மெல்பேன் மற்றும் புனித எல்பன்ஸ் ஆகிய…

Read More