நாடுதிரும்பிய ஆசிய மெய்வல்லுனர் போட்டி வீரர்கள்

(UDHAYAM, COLOMBO) – இந்தியாவின் ஒடிசாவில் நடைபெற்ற 22வது ஆசிய மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் பங்குபற்றிய வீரர்கள் இன்று நாடு திரும்பினர். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தை இன்று காலை வந்தடைந்த இவர்களை விளையாட்டு துறை அமைச்சின் செயலாளர் டொக்டர் D.M.R.B.திசாநாயக்க வரவேற்றார்.

Read More

இராணுவத்தின் குறி தவறியதால் சொந்த வீரர்கள் 11 பேர் பலி

(UDHAYAM, COLOMBO) – பிலிப்பைன்ஸில் இராணுவத்தினர், தீவிரவாதிகளை இலக்குவைத்து நடத்திய வான்வழித் தாக்குதல் ஒத்திகையின்போது குறி தவறியதால் இராணுவத்தைச் சேர்ந்த 11 பேர் உயிரிழந்துள்ளனர். பிலிப்பைன்ஸின் மாராவி தீவுப் பகுதிகளில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அந்நாட்டு இராணுவம் போரிட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இடம்பெற்ற ஒத்திகை தாக்குதலின்போது மேற்கொள்ளப்பட்ட வான்வழித் தாக்குதலில்  11 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். அத்துடன், 8 இராணுவத்தினர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புச் செயலாளர் டெல்ஃப்ன் லோரென்சனா தெரிவித்துள்ளார். இராணுவத்தினரிடையே,…

Read More

அனர்த்தத்தினால் மெய்வல்லுனர் வீரர்கள் பலர் பாதிப்பு

(UDHAYAM, COLOMBO) – அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வீர வீராங்கனைகள் பயிற்றுவிப்பாளர்கள் தொடர்பான அறிக்;கை ஒன்றை விளையாட்டுத்துறை அமைச்சர் தயசிறி ஜயசேகர கோரியுள்ளார். இதற்கு அமைவாக இவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். இலங்கைக்கு சர்வதேச வெற்றிகளை பெற்றுக்கொடுத்த மெய்வல்லுனர் வீரர்கள் பலர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரத்தினபுரி தெலவத்த முத்துவ என்ற இடத்தில் பயிற்சிபெற்ற மெய்வல்லுனர் வீரர் மற்றும் வீராங்கனைகள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை இராணுவ வீரர்கள்

(UDHAYAM, COLOMBO) – இந்தியாவில் எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள 22வது ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை சார்பாக நான்கு இராணுவ விளையாட்டு வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 22வது ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜூலை 6ம் திகதி முதல் 9ம் திகதி வரை இந்தியாவின் புவனேஷ்வர் எனும் இடத்தில் நடைபெறவுள்ளது. குறித்த வீரர்கள் தியகமையில் இலங்கை விளையாட்டு கழகத்தினால் நடாத்தப்பட்ட தேர்வுப் போட்டிகளின்போது தெரிவுசெய்யப்பட்டனர். ஆசிய சாம்பியன்ஷிப் கழகத்தினால் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் ஒவ்வொரு வருடமும் ஏற்பாடு…

Read More

ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணத்துக்கான இலங்கை அணி அறிவிப்பு! : முக்கிய வீரர்கள் அணியில் இணைப்பு

(UDHAYAM, COLOMBO) – இங்கிலாந்தில் எதிர்வரும் ஜுன் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பியன்ஸ் கிண்ணத்திற்கான இலங்கை அணி தலைவராக எஞ்சலோ மெத்தியுஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், உப தலைவராக உபுல் தரங்க நியமிக்கப்பட்டுள்ளார். அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாமில், இலங்கை அணியின் அனுபவ வீரர்கள் சிலர் இணைக்கப்பட்டுள்ளதுடன், புதிதாக தமது திறமைகளை வெளிப்படுத்திவரும் வீரர்களும் இணைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை அனுபவம் வாய்ந்த முக்கிய வீரர்களான திசர பெரேரா, லசித் மலிங்க, சாமர…

Read More