12 நாட்கள் ரணில் நாட்டிலில்லை!

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 12 நாள் பயணமாக நாட்டில் இருந்து வௌியேறியுள்ளார். சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை (13) நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றதாக குறிப்பிடப்படுகின்றது. BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Read More

லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

(UTV | கொழும்பு) – லிட்ரோ எரிவாயு விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர்  முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். அதன்படி, 2.3 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 127 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 795 ரூபாவாகும். 5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 276 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 1,707 ரூபாவாகும். 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 685…

Read More

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் காலமானார்!

(UTV | கொழும்பு) – இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன். சுகயீனமுற்று கொழும்பு கிங்ஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் MP அவர்கள் வபாத்தானர்கள். BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Read More

அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை- ஆஷு மாரசிங்க

(UTV | கொழும்பு) – அதிகரிக்கப்பட்டிருக்கும் வரி வருமானங்களை முறையாக சேர்க்கும் பொறுப்பு அரச அதிகாரிகளுக்கே இருக்கிறது. அதனை செய்ய  தவறும் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடுக்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம். அத்துடன் நாட்டின் மொத்த வருமானம் சர்வதேச நாணய நிதியத்தின் இலக்கை எட்டக்கூடியதாக இருக்கிறது என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்த்தார். ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் வியாழக்கிழமை (14) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து…

Read More

ரணிலுடன் 80 பேர் வெளிநாடுக்கு செல்ல தயார் நிலையில்…!

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கிய குழுவொன்று வெளிநாட்டு பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர். வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, சுற்றாடல் அமைச்சர் கெகலிய ரம்புக்வெல்ல, காலநிலை மாற்ற ஜனாதிபதியின் ஆலோசகர் ருவான் விஜேவர்தன மற்றும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 80 பிரதிநிதிகள் உள்ளடங்கிய குழுவே இந்த பயணத்தில் ஜனாதிபதியுடன் கலந்து கொள்ளவுள்ளனர். துபாயில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள…

Read More

இடைக்கால குழு விவகாரம் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது – ரணில் விக்கிரமசிங்க.

(UTV | கொழும்பு) – இலங்கை கிரிக்கெட் சபைக்கான இடைக்கால குழு நியமனம் தொடர்பில் அரசாங்கத்திற்கோ அல்லது தமக்கோ எதுவும் தெரியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் தெரிவித்துள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இடைக்கால கிரிக்கெட் குழுவொன்றை நியமித்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் சந்திப்பிலிருந்த அமைச்சர்கள் சிலர் கேள்வி எழுப்பிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இடைக்கால கிரிக்கெட் குழுவிற்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் கூட அனுமதிக்காக விளையாட்டுத்துறை அமைச்சர்…

Read More

“சிறுபான்மை மதஸ்லங்களுக்கு ஆபத்தை உருவாக்கும் தொல்பொருள் திணைக்களம்” அமெரிக்கா ஆணையாளர்

(UTV | கொழும்பு) – தொல்பொருள் திணைக்களமானது நாட்டின் வட, கிழக்கு மாகாணங்களில் அப்பிரதேசங்களிலுள்ள கட்டமைப்புக்கள் மற்றும் பௌத்த பிக்குகளுடன் இணைந்து இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் வணக்கத்தலங்களைக் கைப்பற்றுவதற்கு வசதி ஏற்படுத்துகின்றது என சர்வதேச மத சுதந்திரம் தொடர்பான அமெரிக்க ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதேவேளை, நாட்டில் வாழும் சிறுபான்மையின இந்து, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கான மீயுயர் மத சுதந்திரத்தை உறுதிசெய்யும் வகையில் அரசாங்கமானது தற்போது நடைமுறையிலுள்ள ‘ஒடுக்குமுறை’ கொள்கைகள் மற்றும் சட்டங்களை முற்றாக நீக்கவோ…

Read More

இலங்கைக்கு விரைந்த அமைச்சர் நிர்மலா சீதாராமன்!!

(UTV | கொழும்பு) –   இந்தியாவின் நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று (01)முதல் மூன்று நாட்களுக்கு இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இதன்போது யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளதுடன் சில இடங்களை பார்வையிடவுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர் கந்தசுவாமி கோயில், யாழ்ப்பாணம் கலாச்சார மையம் மற்றும் யாழ் பொது நூலகம் ஆகியவற்றை பார்வையிட உள்ளார். யாழ்ப்பாணத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் கிளையையும் (SBI) இந்திய நிதி அமைச்சர் திறந்து வைக்கவுள்ளார்….

Read More

உயர்தரப் பரீட்சையை மேலும் ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கோரி மனு தாக்கல்!!

(UTV | கொழும்பு) – எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதி நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சையை மேலும் ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கோரி மாணவர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பில் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க கல்வி அமைச்சர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு உயர் நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது. இது தொடர்பான மனு இன்று (27) முர்து பெர்னாண்டோ,  குமுதுனி விக்கிரமசிங்க மற்றும்  பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில்…

Read More

இலங்கையில் அதிகரித்துள்ள நகரமயமாக்கல்!

(UTV | கொழும்பு) – இலங்கையின் நகர்ப்புற மக்கள் தொகை 44.57% ஆக அதிகரித்துள்ளதாக தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான அறிக்கை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் நேற்று பாராளுமன்ற வளாகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் காமினி ஹேவகே அவர்களினால் கையளிக்கப்பட்டது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரையின் பிரகாரம், நகர மற்றும்…

Read More