இலங்கை துறைமுகத்தில் இந்திய நீர்மூழ்கி கப்பல்!

(UTV | கொழும்பு) – இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Karanj’ என்ற நீர்மூழ்கி கப்பல் உத்தியோகபூர்வ பயணமாக இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. ‘INS Karanj’ நீர்மூழ்கி கப்பலின் கட்டளை அதிகாரியாக கொமாண்டார் அருணாப் கடமையாற்றுகிறார். இந்த நீர்மூழ்கி கப்பலில் 53 கடற்படையினர் கடமையாற்றி வருகின்றனர். இவர்களில் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் நாட்டில் உள்ள முக்கியமான இடங்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர். மேலும் நீர்மூழ்கி கப்பல் இலங்கையில் இருக்கும் காலப்பகுதியில் அதன் செயற்பாடுகள் தொடர்பில்…

Read More

ஒன்லைன் சட்டத்தை திருத்துமாறு மனித உரிமைகள் பேரவை கோரிக்கை!

(UTV | கொழும்பு) – பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலைப் காப்புச் சட்டம் கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட மனித உரிமைகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது. சிவில் சமூகம் மற்றும் தொழில்துறை பிரச்சினைகளைத் தீர்ப்பதில் மனித உரிமைக் கடமைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக சட்டத்தை திருத்துவது குறித்து பரிசீலிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாக பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.   BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ…

Read More

சற்றுமுன்னர் கெஹலிய சிஐடி முன்னிலை!

(UTV | கொழும்பு) – முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இன்று காலை 09.00 மணிக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொடுக்குமாறு நேற்றைய தினம் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு அமைய அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளார். தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் மருந்து தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியதாக பிரதிப்…

Read More

A/L பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்!

(UTV | கொழும்பு) – க.பொ.த உயர்தர பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. க.பொ.த உயர்தர பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபடும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு செலுத்தப்பட்ட அதே கட்டணத் தொகையே இம்முறையும் வழங்கப்படும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. க.பொ.த உயர்தர பரீட்சை ஜனவரி 4 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை 2,300 க்கும் மேற்பட்ட பரீட்சை…

Read More

திலித்துடன் அவசர சந்திப்பில் தயா ரத்நாயக்க!

(UTV | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க, மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீரவுடன் இன்று காலை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளாா். பொரளையில் அமைந்துள்ள மௌபிம ஜனதா கட்சியின் அலுவலத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஜெனரல் தயா ரத்நாயக்க கடந்த 29 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சகத்யுடன் இணைந்துக்கொண்டிந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட்…

Read More

காணி பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பம்!

(UTV | கொழும்பு) – முறையான காணி உரிமையின்றி நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்திருந்த இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்கும் “உரித்து” வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு பெப்ரவரி (05) திங்கட்கிழமை தம்புள்ளையில் நடைபெறவுள்ளதாக சுற்றுலா, காணி மற்றும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார். ரன் பூமி, ஜெய பூமி மற்றும் சுவர்ண பூமி போன்ற காணி அனுமதி பத்திரங்களை கொண்டிருந்த 10,000 இற்கும் மேற்பட்டவர்களுக்கு நிரந்தர காணி உறுதி…

Read More

மனோராஜபக்சர்களின் அட்டூழியங்களை மன்னிக்க நாம் தயார் இல்லை – மனோ கணேசன்

(UTV | கொழும்பு) – ஒரு கையால் ராஜபக்சர்களை அணைத்தபடி மறுகையால் எம்மை அழைக்காதீர்கள் – புதிய கூட்டணிகள் பற்றி மனோ ராஜபக்சர்களின் அட்டூழியங்களை மன்னிக்க நாம் தயார் இல்லை. ஆகவே ஒரு கையால் ராஜபக்சர்களை கட்டி அணைத்தப்படி மறுகையால் எம்மை சுட்டி அழைக்க வேண்டாம். நாம் இன்று இருக்கும் இடத்தில் செளக்கியமாக இருக்கிறோம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். நாட்டில் உருவாகிவரும் புதிய கூட்டணிகளிடமிருந்து…

Read More

தேர்தலுக்கு தமிழ் கட்சிகளின் ஆதரவே பெரும் காரணியாகும்!

(UTV | கொழும்பு) – எதிர்வரும் தேர்தலில் அரசாங்கம் அமைப்பதற்கு அல்லது புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவு பலமான காரணியாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இலங்கையில் சிறுபான்மை கட்சிகளின் வாக்கு வீதம் 31 வீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், தமிழ் அரசியல் கட்சிகள் ஆதரவு வழங்கும் விதத்தை கருத்திற்கொண்டு பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் இந்த சில விடயங்களை பொறுத்தே அமையும் என…

Read More

கலைக்கப்பட்ட இடைக்கால குழு!

(UTV | கொழும்பு) – இலங்கை கராத்தே சம்மேளனம் மற்றும் இலங்கை மோட்டார் விளையாட்டு சங்கத்திற்காக நியமிக்கப்பட்ட இடைக்கால குழுக்களை கலைக்க விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நடவடிக்கை எடுத்துள்ளார். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வருடம் ஜூலை மாதம் 28 ஆம் திகதி, அப்போது விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த ரொஷான் ரணசிங்க கராத்தே டோ சம்மேளனத்தின் பதிவை இடைநிறுத்தி, சங்கத்தின் பணிகளை தற்காலிகமாக நடத்துவதற்கு இடைக்கால குழுவை நியமித்தார். இது தொடர்பான…

Read More

கன்னி பயணத்தை ஆரம்பிக்கும் உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல்!

(UTV | கொழும்பு) – உலகின் மிகப்பெரிய பயணிகள் சொகுசு கப்பலான ‘ஐகான் ஆஃப் தி சீஸ்’ தனது முதல் பயணத்தை தொடங்கியுள்ளது. குறித்த கப்பல் புளோரிடாவின் மியாமியில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும், கரீபியன் தீவுகளை 7 நாட்களுக்கு சுற்றி தனது முதல் பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரோயல் கரீபியன் நிறுவனத்துக்குச் சொந்தமான இந்தக் கப்பல் 365 மீட்டர் நீளமும், 20 தளங்களும் கொண்டதாகவும், அதிகபட்சமாக 7,600 பயணிகள் இதில் பயணிக்க…

Read More