Jeevitha

கஜேந்தரகுமார் பொன்னம்பலம் வீட்டுக்கு முன்னாள் மீண்டும் பதற்றம் : குவிக்கப்பட்ட பாதுகப்புப்படை

(UTV | கொழும்பு) – தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டின் முன்பாக பௌத்தமதகுருமார் அடங்கிய குழுவொன்றை சேர்ந்தவர்கள் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பதற்றநிலையேற்பட்டுள்ளது. அந்த பகுதியில் பெருமளவு இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர். BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Read More

சந்திரயான் 3 தரையிறங்கிய பகுதிக்கு “சிவசக்தி” என பெயர் சூட்டிய மோடி!

(UTV | கொழும்பு) –   நிலவில் சந்திரயான் 3 தரையிறங்கிய பகுதிக்கு, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் “சிவ சக்தி” என்று பெயர் சூட்டியுள்ளார். ‘சிவம்’ என்பதில் மனித குலத்தின் நலனுக்கான தீர்மானமும், அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றும் திறனை ‘சக்தி’ நமக்கு வழங்குகிறது என்றும், சந்திரனின் சிவசக்தி முனை, இமயமலையையும் குமரி முனையையும் இணைத்த உணர்வைத் தருகிறது என்றும் பெருமிதத்துடன் கூறினார். BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன்…

Read More

தொடங்கொடை கொலைச் சம்பவம் : முக்கிய சந்தேக நபர்கள் இருவர் கைது!

(UTV | கொழும்பு) – தொடங்கொடையில் நபர் ஒருவரை படுகொலை செய்த சம்பவத்தோடு தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் இருவர் களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். களுத்துறை, தொடங்கொடை டொலேலந்த பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 37 வயதான திமுத் சாமிக என்ற நபர் வெட்டுக்காயங்களுடன் கடந்த 14ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டிருந்தார். ஒரு பிள்ளையின் தந்தையான இவர், தனது மனைவியின் பெற்றோரின் வீட்டில் தங்கியிருந்த வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டுக்குள் புகுந்த கும்பலொன்று…

Read More

ஹட்டன் – ‌நுவரெலியா பிரதான வீதியில் விபத்து

ஹட்டன் – ‌நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை சமூர்த்தி வங்கிக்கு அருகாமையில் வேன் ஒன்று 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் சாரதி மற்றும் வேனில் சென்ற மற்றுமொருவரும் பலத்த காயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று (26) காலை 5 மணி அளவில் நிகழ்ந்துள்ளது குறித்த வேன் டிக்கோயா பகுதியில் உள்ள வாகன திருத்தம் நிலையத்துக்கு சென்று லிந்துலை மட்டுகலை தோட்டத்திற்கு செல்லும் போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சாரதி வாகனத்தை செலுத்தும் போது…

Read More

எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

(UTV | கொழும்பு) – நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மிகக் குறைந்த நீர் உள்ள இடங்களில் குளிப்பதும், மீன்பிடிப்பதும் இந்த நோய்களுக்கு வழிவகுக்கும் என அதன் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிடுகின்றார். குறைந்தளவு நீர் உள்ள இடங்களில் குளிப்பதன் மூலம் தோல் நோய்கள் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் வலியுறுத்தியுள்ளார். குடிநீர் விற்பனை செய்யும் இடங்களை உன்னிப்பாக கண்காணித்து…

Read More

நாடாளுமன்றத்தில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் : சிக்கிய மேலும் சிலர்

(UTV | கொழும்பு) – நாடாளுமன்றத்தின் பராமரிப்பு பணிகளில் ஈடுபடும் பணிப்பெண்கள் சிலர் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் மேலும் சில ஊழியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது தொடர்பில் நாடாளுமன்றத்தின் தலைவர்கள் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தின் விசேட குழுவொன்று விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் அதன் அறிக்கை நாடாளுமன்ற பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீரவிடம் கையளிக்கப்படவுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக, குறித்த துறையின் உதவி வீட்டுப் பணிப்பெண் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். பல…

Read More

நாட்டிலிருந்து வெளியேறும் 800 மருத்துவர்கள்???

(UTV | கொழும்பு) – 80 மருத்துவர்கள் அடுத்த சில மாதங்களில் நாட்டிலிருந்து வெளியேற உள்ளனர் என தகவல்கள் வெளியாகின்றன எம்டியை( Doctor of Medicine)பூர்த்திசெய்த மருத்துவர்களே நாட்டிலிருந்து வெளியேறவுள்ளனர். 822 மருத்துவர்கள் தற்போது வெளிநாடுகளில் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் 822 மருத்துவர்களும் நாடு திரும்புவதற்கான வாய்ப்பு குறைவு என சிரேஸ்ட சுகாதார அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். எனினும் தற்போதுள்ள மருத்துவர்கள் விசேடவைத்திய நிபுணர்களை தக்கவைப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார். BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும்…

Read More

முட்டை இறக்குமதி தொடரும்

(UTV | கொழும்பு) – முட்டை இறக்குமதி தொடரும் என்று இலங்கை அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. முட்டை இறக்குமதியின் மூலம் சந்தையில் ஏற்பட்டிருந்த முட்டை தட்டுப்பாட்டை தவிர்க்க முடிந்ததாக அதன் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்தார். அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவைக் கொள்கையின் அடிப்படையில், அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபன் ஊடாக, நாளாந்தத் தேவையான ஒரு மில்லியன் முட்டைகளுக்கு முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார். அடுத்த 03 மாதங்களுக்கு தேவையான அனுமதி…

Read More

நீர் தொட்டியில் வீழ்ந்து பெண் குழந்தை பலி!

(UTV | கொழும்பு) – வவுனியா – நெளுக்குளம் பகுதியில் நீர்த்தொட்டியில் வீழ்ந்து 2 வயது பெண்குழந்தை ஒன்று மரணமடைந்தது. நேற்று (25) மாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, மாலை வீட்டு முற்றத்தில் குறித்த சிறுமி விளையாடிக்கொண்டிருந்தார். எனினும் சிறிது நேரத்தில் குழந்தையை காணாத நிலையில் பெற்றோர் அவரைத்தேடியுள்ளனர். இதன்போது குறித்த குழந்தை கிணற்றிற்கு அருகாமையில் இருந்த நீர்த்தொட்டியில் வீழ்ந்துள்ளமை கண்டறியப்பட்டது. உடனடியாக மீட்கப்பட்ட சிறுமி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும்…

Read More

முஸ்லிம் அரசியலில் தன்னையும் ஒருவராக நிரூபித்த மயோன் முஸ்தபா அவர்களின் இழப்பு கவலையளிக்கிறது ! – சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ்

(UTV | கொழும்பு) – அம்பாறை மாவட்டத்தில் பாரம்பரியமிக்க அரசியல் குடும்பத்தின் அரசியல் வாரிசுகளில் ஒருவராக அரசியல் களமாடி தன்னை மக்கள் சேவகனாக பல்வேறு காலப்பகுதிகளிலும் நிரூபித்த உயர்கல்வி முன்னாள் பிரதியமைச்சர் மரியாதைக்குரிய எம்.எம்.எம். முஸ்தபா (மயோன் முஸ்தபா) அவர்கள் காலமான செய்தி இன்று காலையில் பேரிடியாக என்னை வந்தடைந்தது. (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்) என்று முன்னாள் இராஜங்க அமைச்சரும், ஸ்ரீ.ல.மு.கா பிரதித்தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்….

Read More