புகையிரதம் தடம் புரண்டு விபத்து
(UTV|TURKEY)-துருக்கியில் பயணிகள் புகையிரதம் தடம் புரண்ட விபத்தில் அதில் பயணம் செய்த 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 73 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பல்கேரிய எல்லையிலுள்ள கபிகுலே நகரிலிருந்து இஸ்தான்புல்லுக்குப் பயணித்த புகையிரதமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக செய்திகள் தெரிவித்துள்ளன. சுமார் 360 பயணிகளுடன் சென்ற குறித்த புகையிரத்தின் 6 பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அதிபர் எர்டோகன் ஆழ்ந்த இரங்கலை…