அரசாங்கத்தை எம்மிடம் ஒப்படைத்துவிட்டு -இந்த அரசாங்கம் நாளைக்கு வேண்டுமானாலும் வீட்டுக்குச் செல்லலாம்

(UTV|COLOMBO)-நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்செய்வதற்கான வழியைக் கூறுமாறு இந்த அரசாங்கம் தன்னிடம் கோருவதாகவும், எம்மிடம் அரசாங்கத்தை ஒப்படைத்தால் தாம் அதனைச் செய்து காட்டுவோம் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த அரசாங்கத்துக்கு நாளைக்கு வேண்டுமானாலும் வீட்டுக்குச் செல்லுமாறு கூறுகின்றோம். நாம் இந்த நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவோம் எனவும் மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறினார். மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபுர்வ இல்லத்தில் நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக்…

Read More

ஈராக்கில் மனித உரிமை ஆர்வலர் ஒருவர் சுட்டுக்கொலை!

(UTV|IRAQ)-ஈராக்கில் மனித உரிமை ஆர்வலரான சௌதா அல் அலி என்பவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவமானது, ஈராக்கில் அமைத்துள்ள பாஸ்ரா நகரத்தில் அரங்கேறியுள்ளது. சம்பவத்தன்று சௌதா அல் அலி என்பவர் பொருட்களை வாங்கி கொண்டு தனது வாகனத்தில் ஏறும் போது அடையாளம் தெரியாது மர்ம நபர் ஒருவர் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த நிகழ்வானது அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சி .சி. டிவி கேமராவில் பதிவாகியுள்ளது….

Read More

சவுதியில் இருந்து வந்த மேலும் சில பயணிகளுக்கு நோய்த்தொற்று

(UTV|SAUDI)-சவுதியில் இருந்து அமெரிக்காவுக்கு விமானங்களில் வந்த மேலும் சில பயணிகளுக்கு நோய்த்தொற்று இருந்ததால் விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. துபாயிலிருந்து கடந்த புதன்கிழமை அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்திற்கு வந்த எமிரேட்ஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தனர். சுமார் 521 பயணிகளில், 100-க்கும் அதிகமான பயணிகளின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். சிலருக்கு இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டன. இதனை அடுத்து, அவர்களுக்கு உரிய மருத்துவ பரிசோதனை…

Read More

சவுதி அரேபிய நகரத்தில் தற்கொலைப்படை பயங்கரவாதி கைது

(UTV|SAUDI)-சவுதி அரேபிய நகரம் அல்புக்கரியா. இந்த நகரத்தில் நேற்று முன்தினம் அதிகாலை 1.30 மணிக்கு சந்தேகத்துக்கு இடம் அளிக்கிற வகையில் ஒருவனை போலீஸ் அதிகாரிகள் கண்டனர். அவன் இடுப்பில் வெடிகுண்டுகள் பொருத்திய ‘பெல்ட்’ அணிந்து வந்த தற்கொலைப்படை பயங்கரவாதி என போலீஸ் அதிகாரிகள் சந்தேகித்தனர். அவனை அவர்கள் கைது செய்ய முயற்சித்தபோது, அவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு விட்டு அவன் தப்பினான். ஆனால் போலீஸ் அதிகாரிகள் விடாமல் துரத்தினர். அதைத் தொடர்ந்து அவன், அந்த நகர…

Read More

பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்க உள்ள இம்ரான் கானுக்கு சவுதி மன்னர் வாழ்த்து

(UTV|SAUDI)-பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து அக்கட்சியின் தலைவர் இம்ரான் கான் வருகின்ற 18-ம் தேதி பிரதமராக பதவியேற்க உள்ளார். இவருக்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்க உள்ள இம்ரான் கானுக்கு சவுதி அரசர் சல்மான் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதேபோல், இளவரசர் முகமது பின் சல்மானும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதேபோல், ஜப்பான், ஈரான் போன்ற பல்வேறு…

Read More

சவுதி அரேபியாவில் 30 ஆண்டுகளாக தூங்காத நபர்

(UTV|SAUDI)-சவுதி அரேபியாவில் 70 வயது முதியவர் ஒருவர் கடந்த 30 ஆண்டுகளாக ஒரு நொடி கூட தூங்காமல் அவதிப்பட்டு வருகிறார். தொடக்கத்தில் அவர் சவுதி அரேபியா ராணுவத்தில் பணிபுரிந்தார். அப்போது தொடர்ந்து 20 நாட்கள் தூங்காமல் கண்விழித்து இருந்தார். பணி முடிந்ததும் ஆஸ்பத்திரிக்கு சென்று அதற்கான சிகிச்சை பெற்றார். இருந்தும் அவருக்கு தூக்கம் வரவில்லை. எனவே 4 நாடுகளை சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள் குழு ஒன்று பரிசோதித்தது. இருந்தும் அவரால் 30 ஆண்டுகளாக ஒரு நொடி கூட…

Read More

கட்டார் நாட்டில் தஞ்சமடைந்த ஐக்கிய அமீரக இளவரசர்

(UTV|DUBAI)-ஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும், புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ரஷித் பின் அல்-ஷாரிக், ஐக்கிய அமீரக அரசு மீது பரபரப்பான குற்றச்சாட்டை சுமத்தி நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். ஐக்கிய அமீரகத்தின் தலைநகரான அபுதாபியின் ஆட்சியாளர்கள் தம்மை மிரட்டி வருவதாகவும், உயிருக்கு ஆபத்து இருப்பதால் கத்தாரில் தஞ்சமடைந்துள்ளதாக தோஹாவுக்கு இன்று வந்தடைந்த அல்-ஷாரிக் அமெரிக்க ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார். அல்-ஷாரிக்கின் குற்றச்சாட்டை ஐக்கிய அமீரக வெளியுறவு…

Read More

ஆண் பாடகரை கட்டிப்பிடித்த பெண் கைது

(UTV|SAUDI)-சௌதி அரேபியாவில் ஒரு இசை கச்சேரியில் பாடிக்கொண்டிருந்த ஆண் பாடகரை மேடை மீது ஏறி சென்று கட்டிப்பிடித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கு நகரமான டைஃபில் நடைபெற்ற ஒரு விழாவில் மஜீத் அல் மொஹாண்டிஸ் என்ற அந்த பாடகர் மேடையில் பாடிக்கொண்டிருந்த போது திடீரென்று ஓடிச்சென்ற அந்த பெண் அவரை கட்டிப்பிடித்தார். அந்த பெண் மேடைக்கு ஓடிச்செல்வதையும், மொஹாண்டிசை கட்டிப்பிடிப்பதையும் மற்றும் அவரை அங்கிருந்து அகற்றுவதற்கு பாதுகாவலர்கள் முயற்சிப்பதையும் விளக்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில்…

Read More

துருக்கி அமைச்சரவையில் நிதி அமைச்சர் அர்துகானின் மருமகனார்

(UTV|TURKEY)-துருக்கியின் முதலாவது நிறைவேற்று ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ரஜப் தையிப் அர்துகான் தனது அமைச்சரவையில் நிதியமைச்சுப் பதவியை மருமகனுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார். துருக்கி ஜனாதிபதி அர்துகானின் மறுமகனான பெராத் அல் பெராக் என்பவர் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதி அர்துகானின் அமைச்சரவையில் மின்சக்தி அமைச்சராக செயற்பட்டவர். அர்துகானின் அமைச்சரவையில் 16 அமைச்சர்கள் நியமனம் பெற்றுள்ளனர். இந்த அமைச்சரவை கடந்த 9 ஆம் திகதி அமைக்கப்பட்டது. நிருவாகத்துறையின் தலைவரான ஜனாதிபதி அர்துகான் அமைச்சரவையில் நிதி அமைச்சுப்…

Read More

சவுதியில் பயங்கரவாத தாக்குதல- 4 பேர் பலி

(UTV|SAUDI)-சவுதி அரேபியாவின் ரியாத் நகரின் வட பகுதி,  காஸிம் பிராந்தியத்திலுள்ள சோதனைச் சாவடியொன்றின் மீது நேற்று (08) மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பாதுகாப்பு அதிகாரியொருவர் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். புரைதா தரபிய்யா வீதியிலுள்ள சோதனைச் சாவடி மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மூன்று பயங்கரவாதிகள் இந்த தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. பாதுகாப்பு தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட பதில் தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர். பாதுகாப்பு அதிகாரியொருவரும், பங்களாதேஷ் நாட்டவர் ஒருவரும் உயிரிழந்தவர்களில் அடங்குகின்றனர். காஸிம் பிராந்தியம்…

Read More