துருக்கியில் நிலநடுக்கம்!

(UTV | கொழும்பு) – துருக்கியில் இன்று காலை 5.19 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 என்ற அளவில் பதிவாகி இருப்பதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம் தரைமட்டத்தில் இருந்து 10 கிமீ ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்களின் விவரங்கள் வெளியாகாத நிலையில், உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக துருக்கியில் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் ஏற்பட்ட தொடர்…

Read More

பாலஸ்தீன தாக்குதலில் ஈடுபட்ட ஐ.நா அமைப்பின் பணியாளர்கள்!

(UTV | கொழும்பு) – ஓக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலில் ஈடுபட்டவர்களில் பாலஸ்தீனத்திற்கான ஐநா அமைப்பின் பணியாளர்களும் உள்ளனர் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதை தொடர்ந்து அந்த அமைப்பிற்கான நிதியை அவுஸ்திரேலியா இடைநிறுத்தியுள்ளது. ஒக்டோபர் ஏழாம் திகதி தாக்குதலில் தனது அமைப்பை சேர்ந்தவர்களும் ஈடுபட்டனர் என்ற விபரங்களை இஸ்ரேல் வழங்கியுள்ளது என பாலஸ்தீன அகதிகளிற்கான ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன குறிப்பிட்ட பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. இஸ்ரேலிற்கு…

Read More

இரு நாடுகள் செல்வதற்கு இனி விசா தேவையில்லை!

(UTV | கொழும்பு) – சீனர்கள் அதிகளவில் வசிக்கும் நாடுகளில் ஒன்று சிங்கப்பூர். இந்த இரு நாடுகளும் நீண்ட காலமாகவே நெருங்கிய நட்பு நாடுகளாக உள்ளன. இந்நிலையில் தற்போது இரு நாடுகளும் தங்களது விசா நடைமுறையில் மாற்றங்களை கொண்டு வருவதற்காக ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அதன்படி இரு நாடுகள் இடையே செல்வதற்கு இனி விசா தேவையில்லை. சிங்கப்பூர் மற்றும் சீன மக்கள் தங்களது சாதாரண கடவுச்சீட்டு மூலம் பரஸ்பர நாடுகளில் 30 நாட்கள் வரை தங்கிக்கொள்ளலாம். இது…

Read More

இங்கிலாந்து மன்னர் வைத்தியசாலையில் அனுமதி!

(UTV | கொழும்பு) – இங்கிலாந்து மன்னர் 3ஆம் சார்லசுக்கு (வயது 75) ‘புராஸ்டேட்’ அறுவை சிகிச்சைக்கு திட்டமிடப்பட்டபடி, அவர் லண்டனில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் நேற்று  அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னதாக இதே வைத்தியசாலையில் சார்லசின் மருமகளும், இளவரசியுமான கேத்துக்கு கடந்த வாரம் அறுவை சிகிச்சை நடந்தது. வைத்தியசாலையிலேயே தங்கியிருக்கும் கேத்தை நேற்று  காலையில் சார்லஸ் வைத்தியசாலையில் சென்று பார்த்தார். அதைத்தொடர்ந்து அவரது அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகள் வைத்தியசாலையில் நடந்தன….

Read More

வீடு வாங்கினால் மனைவி இலவசம் – சர்ச்சைக்குள்ளான விளம்பரம்

(UTV | கொழும்பு) – போட்டி நிறைந்த உலகில் தங்கள் பொருட்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு வியாபார நிறுவனங்கள் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. மேலும், வியாபாரத்தை பெருக்குவதற்காகவும், வாடிக்கையாளர்களை கவர்வதற்காகவும் சில நிறுவனங்கள் பம்பர் பரிசு, கேஷ் பேக் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அறிவிக்கின்றன. அதுபோன்ற விளம்பரங்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு சில நேரங்களில் எதிர்மறையாகவும் அமைந்து விடுகிறது. அப்படி ஒரு நிகழ்வு சீனாவில் நடைபெற்றுள்ளது. சீனாவின் டிரையஜின் நகரை சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட்…

Read More

வேட்பாளராக களமிறங்கும் ட்ரம்ப்!

(UTV | கொழும்பு) – அமெரிக்காவில் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப், தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனுக்கு முன்பு நாட்டின் ஜனாதிபதியாக இருந்துள்ளார். மீண்டும் அவர் ஜோபைடனை எதிர்த்து போட்டியிடவுள்ளார். ஆனால் இதே கட்சியை சேர்ந்தவரான நிக்கி ஹேலி (ஐக்கிய நாடுகள் அவையின் முன்னாள் தூதர்), வேட்பாளர் தேர்வில் போட்டியிலுள்ளார். இதுகுறித்து கட்சியின் தலைவரான ரோனா மெக்டேனியல் கூறும்போது, “ஹேலி மிகப்பெரிய பிரசாரத்தை நடத்தியிருந்தாலும், கட்சியினர் எங்கள் இறுதி வேட்பாளரை சுற்றி ஒன்றுபட வேண்டும். அது…

Read More

ஏவுகணை தாக்குதல் – ஏடன்வளைகுடாவில் தீப்பிடித்து எரியும் கப்பல்

(UTV | கொழும்பு) – ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் காரணமாக ஏடன்வளைகுடாவில் எண்ணெய்கப்பலொன்று தீப்பிடித்து எரிவதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். ஹெளத்திகிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலால் மார்லின் லுவாhன்டா என்ற கப்பல் தீப்பிடித்துள்ளது என கப்பலை இயக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது. கப்பலின் எண்ணெய் தாங்கியொன்று தாக்கப்பட்டுள்ளதால் கப்பல் தீப்பிடித்து எரிவதாக தகவல் வெளியாகியுள்ளது. கப்பல் எதிர்ப்பு ஏவுகணை எண்ணெய் கப்பலை தாக்கியுள்ளது என தெரிவித்துள்ள அமெரிக்க அதிகாரிகள் கடற்படை கப்பலொன்று உதவிக்கு விரைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளனர். காயங்கள்…

Read More

கனடா – பிரிட்டன் வர்த்தக பேச்சுவார்த்தை நிறுத்தம்!

(UTV | கொழும்பு) – கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையை பிரிட்டன் நிறுத்தியுள்ளது. மாட்டிறைச்சி மற்றும் பாலாடைக்கட்டி தொடர்பான கருத்து வேறுபாடு காரணமாக விவாதங்கள் முறிந்த நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறியதை அடுத்து, இரு நாடுகளும் கடந்த இரு ஆண்டுகளாக வர்த்தகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. ஒரு காலவரையறை ஒப்பந்தம் அதிக இறக்குமதி வரி இல்லாமல் கார்கள் மற்றும் பாலாடைக்கட்டிகளை விற்பனை செய்ய பிரிட்டன் அனுமதித்தது. எனினும், புதிய ஒப்பந்தத்தின் ஒரு…

Read More

இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பவதாரணியின் பூதவுடல்!

(UTV | கொழும்பு) – மறைந்த பின்னணி பாடகியான பவதாரணியின் பூதவுடல் இன்று  பிற்பகல் 1.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் UL 127 என்ற விமானத்தினூடாக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Read More

சவுதியில் திறக்கப்பட்ட மதுபானக்கடை!

(UTV | கொழும்பு) – சவுதியில் மதுபானக்கடை திறக்கப்பட்டுள்ளது என வெளிநாட்டு செய்தி சேவைகள் செய்தி வெளியிட்டுள்ளன. முஸ்லிம் அல்லாத வெளிநாட்டு தூதர்களுக்கு மட்டுமே மதுபானக்கடை திறக்கப்பட்டுள்ளது, சவுதிகளுக்கு 70 ஆண்டுகளுக்கு பிறகு மதுபானக்கடை திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சவூதி அரேபியாவில் மதுவுக்கு 1950 ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. அப்போது சவுதி அரேபியாவின் மன்னராக அப்துல் அஜீஸ் இருந்தார். மன்னரின் மகன் இளவரசர் மிஷாரி மது அருந்திவிட்டு, ஜெட்டாவில் பிரித்தானிய துணைத் தூதராக இருந்த சிரில் ஒஸ்மானை…

Read More