இலங்கை கிரிக்கெட் அணியின் படுதோல்விக்கு அமைச்சர் பைஸர் முஸ்தபாவே பொறுப்பு?
(UTV|COLOMBO)-இலங்கை கிரிக்கெட் அணி ஆசியக் கிண்ணப் போட்டியின் முதல் சுற்றிலேயே வெளியேறுவதற்கும் இப்போட்டியில் இலங்கை அணி முகம்கொடுத்த படுதோல்விகளுக்கும் உரிய பொறுப்பை விளையாட்டுத் துறை அமைச்சர் பைஸர் முஸ்தபாவே ஏற்றுக் கொள்ள வேண்டும் என 16 பேர் கொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்தார். விளையாட்டுத் துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா 63 விளையாட்டுக்களில் எந்தவொரு விளையாட்டிலும் கலந்துகொண்டதாக நாம் கேள்விப்பட்டதில்லை. அவர் வேண்டுமென்றுதான் கிரிக்கெட் விளையாட்டுச் சங்கத்தின் தெரிவை…