அத்துருவெல்லயில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்
(UTV|COLOMBO)-கொஸ்கொட – அத்துருவெல்ல பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 2 பேர் காயமடைந்துள்ளனர். இருவரும் காரில் பயணித்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் காயமடைந்தவர்கள் களுத்துரை நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த இருவரும் சில கொலை வழக்குகளுடன் தொடர்புடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV…