தீப்பெட்டி உற்பத்தியாளர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதாக பாதுகாப்புச் செயலாளர், அமைச்சர் ரிஷாத்திடம் உறுதியளிப்பு!
(UTV|COLOMBO)-தீப்பெட்டி உற்பத்தியில் ஏற்பட்டிருக்கும் தடைகளை நீக்கும் வகையில், கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும், தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத்துக்கும் இடையிலான சந்திப்பின் போது, சில முன்னேற்றகரமான தீர்வுகள் கிடைக்கப்பெற்றதாக தாக அந்தச் சங்கத்தின் தலைவர் பி.டி.ஆர்.ராஜனும், செயலாளர் கே.ஏ.எஸ்.ஹைதர் அலியும் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொடர்புகொண்டு, தீக்குச்சிகளை உற்பத்தி செய்வதற்கான முக்கிய இரசாயனப்பொருட்களான பொட்டாசியம் குளோரைட் மற்றும் சிவப்பு பொசுபரஸ் ஆகியவற்றின் இறக்குமதியில், பாதுகாப்பு அமைச்சின் கெடுபிடிகளை நீக்கித்தருமாறு விடுத்த வேண்டுகோளை…