“ஆசிரியர்களை மனம்போன போக்கில் இடமாற்றஞ் செய்து கல்வி நடவடிக்கைகளை பாழாக்காதீர்கள்”

(UTV|COLOMBO)-ஆசிரியர்களை இடமாற்றஞ் செய்யும் போது, அந்தந்த பாடசாலைகளில் பதிலீட்டு ஆசிரியர்களை நிரப்பாமல் அதனை மேற்கொள்ள வேண்டாம் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நானாட்டான் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று காலை (21) நானாட்டான் பிரதேச செயலகத்தில், பிரதேச செயலாளர் ஸ்ரீஸ்கந்த ராஜாவின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவர்களான அமைச்சர் ரிஷாட் பதியுதீன், சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி, காதர் மஸ்தான் எம்.பி ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தின் போது,…

Read More