இலங்கை – பங்களாதேஷிற்கும் இடையிலான உத்தேச சுதந்திர வர்த்தக உடன்படிக்கை

(UTV|COLOMBO) இலங்கைக்கும் – பங்களாதேஷிற்கும் இடையிலான உத்தேச சுதந்திர வர்த்தக உடன்படிக்கை எதிர்காலத்தில் பொருளாதார ஒத்துழைப்பு வலுப்பெற வழிவகுக்குமென இலங்கை, பங்களாதேஷ் வர்த்தகப் பேரவையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள ரேணுகா ஜயமான்ன தெரிவித்துள்ளார். அவர் பேரவையின் வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். இலங்கையும் பங்களாதேஷும் 45 வருட கால இராஜதந்திர உறவுகளைப் பேணியுள்ளன. இது பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த வழிவகுத்துள்ளது என ரேணுகா ஜயமான்ன கூறினார்.        

Read More