இன்று பிணை வழங்காவிடின் சாகும்வரை உண்ணாவிரதம்
(UTV|COLOMBO)-குற்றவாளியாக இனம்காணப்பட்டு சிறைத் தண்டனை அனுபவித்து வரும், கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இன்றைய தினம் பிணை வழங்கப்படாவிடின் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளப் பிக்குகள் சிலர் தயாராகியுள்ளனர். ஞானசார தேரரை நிரபராதியாக அறிவித்து விடுதலை செய்ய கோரித் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு மனு இன்று (22) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இதன்போது ஞானசார தேரருக்கு பிணை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகச் சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாகல்காந்தே சுதத்த தேரர் தெரிவித்துள்ளார். அவ்வாறு பிணை வழங்கப்படாவிடின் அடுத்தகட்டமாகச்…