இலங்கை – சீனா இடையிலான வர்த்தக உறவுகளை மேலும் வளர்ப்பது தொடர்பில் ஆலோசனை
(UTV|COLOMBO)-கடந்த ஆண்டு இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையில் இடம்பெற்ற வர்த்தகத்தின் மொத்த பெறுமதி 460 கோடி டொலரை எட்டியதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அதற்கு முன்னைய வருடத்துடன் ஒப்பிடுகையில் இது மூன்று சதவீத அதிகரிப்பு என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள சீன வர்த்தகத் தூதுக்குழுவுடனான கலந்துரையாடலில் அவர் இது தொடர்பிலான புள்ளிவிபரங்களை அறிவித்தார். அடுத்த மாதம் 14ஆம் திகதி தொடக்கம் 20ஆம் திகதி வரை சீனாவின் யுனான் மாநிலத்தில் நடைபெறவுள்ள கண்காட்சியில் கலந்து…