இ.போ.ச. ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது

(UTV|COLOMBO)-வட மாகாணத்தின் சில பகுதிகளில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸின் ஊழியர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தில், குறித்த தனியார் பஸ்ஸின் உரிமையாளர் கைது செய்யப்பட்டதையடுத்து, இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர் நேற்று (17) இரவு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில்…

Read More