ஈரான் ஜனாதிபதியை சந்திக்கவுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன

(UTV|COLOMBO)-உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஈரான் சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இன்றைய தினம் அந்த நாட்டு ஜனாதிபதி ஹசன் ரூஹானியை சந்திக்கவுள்ளார். இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு ஈரான் சென்றுள்ள ஜனாதிபதி, அங்கு இருநாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தகம் தொடர்பான பல ஒப்பந்தங்களில் கைச்சாத்திடவுள்ளார். ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானியின் விசேட அழைப்பையேற்று சென்றுள்ள ஜனாதிபதி ஈரான் வர்த்தக சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட முதலீட்டு வர்த்தக மாநாட்டிலும் கலந்து கொள்ளவுள்ளார்….

Read More