உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் 31ஆம் திகதிக்கு முன்பு…

(UTV|COLOMBO)-கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை 31ஆம் திகதிக்கு முன்பு வெளியிடப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும்,குறித்த பணிகள் நிறைவடைந்த பின்னர் பெறுபேறுகள் வெளியிடப்படுமென பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் நாடுபூராகவும் 3,21,000 மாணவர்கள் தோற்றியிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.        

Read More