தேயிலை உற்பத்தியில் வளர்ச்சி
(UTV|COLOMBO)-இலங்கையின் தேயிலை உற்பத்தி நடப்பு ஆண்டில் பாரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது சராசரியாக 6 தசம் 7 மில்லியன் கிலோ கிராம் தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரை 258 தசம் 3 மில்லியன் கிலோ கிராம் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. உயர்மட்ட மற்றும் நடுத்தர தேயிலை உற்பத்தியின் வளர்ச்சிப் போக்கு உயர்மட்டத்தில் காணப்படுவதால் இதன் வருமானமும் அதிகரித்திருப்பதாக தரவுகள் குறிப்பிடுகின்றன. [alert…