எதிர்வரும் திங்கட்கிழமை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சில பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்
(UTV|COLOMBO)-வறட்சி காரணமாக மூடப்பட்ட ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவம், தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக பீடங்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் திங்கட்கிழமை திறக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, சமூக விஞ்ஞானம் மற்றும் மனிதவள மேம்பாட்டு பீடங்கள் என்பன பரீட்சை நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் திங்கட்கிழமை திறக்கப்படவுள்ளன. விடுதி வசதிகள் வழங்கப்பட்டுள்ள மாணவர்களை எதிர்வரும் 30 ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு பின்னர் விடுதிகளுக்கு வருகை தருமாறு பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன்…