எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் ஓய்வூதியம் பதிவு செய்வதற்கான கால எல்லை நிறைவு
(UTV|COLOMBO)-விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியம் கொடுப்பனவு முறையின் கீழ், மீள பதிவு செய்வதற்காக வழங்கப்பட்டுள்ள கால எல்லை எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. இது தொடர்பாக ஓய்வூதிய கொடுப்பனவு பணிப்பாளர் நாயகம் ஜகத் டயஸ் தகவல் தருகையில் இதுவரையில் மூன்று இலட்சத்து 80 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர் என்று தெரிவித்தார். முடிந்த வரையில் விரைவாக பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதுடன் தற்பொழுது ஓய்வூதியம் பெறும் அரச சேவையாளர்கள் இதற்காக மீள பதிவு செய்ய வேண்டியதில்லை. …