ஐ. நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக் கூட்டம் இன்று ஆரம்பம்
(UTV|COLOMBO)-ஐக்கிய நாடுகளின் 39வது மனித உரிமைகள் பேரவைக் கூட்டம் இன்று(10) ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயற்பாட்டுக்குழு இன்று தமது 116 ஆவது அமர்வை நடத்தவுள்ளது. இந்த அமர்வு எதிர்வரும் 14 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த அமர்வில் 46 நாடுகளை சேர்ந்த 840 சம்பவங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. இந்த செயற்பாட்டுக் குழு, அனைத்து நாடுகளையும் தழுவிய 5 சுயாதீன வல்லுனர்களை உறுப்பினர்களாக கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. [alert…