இலங்கை ஒலிம்பிக்வீரர்கள் உள்ளடக்கிய சங்கம்
(UDHAYAM, COLOMBO) – ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய வீர வீராங்கனைகளை கொண்ட சங்கமொன்றை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முதல் கட்ட பேச்சுவார்த்தையாக சிரேஷ்ட இலங்கை ஒலிம்பிக் வீர வீராங்கனைகள் நேற்று சமூகவலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவை சந்தித்தனர். 1948ம் ஆண்டு முதல் ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய 75 வீர வீராங்கனைகள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் மற்றும் எதிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட உள்ள வீர வீராங்கனைகளின் சேமநலனை கருத்திற்கொண்டு செயற்படுவதற்கே இந்த…