ஒழுக்காற்று குழு விசாரணைக்காக முன்னிலயாகும் சபீர் ரஹ்மான்

(UTV|BANGLADESH)-பங்களாதேஷின் துடுப்பாட்ட வீரர் சபீர் ரஹ்மான் நீண்ட கிரிக்கெட் தடையை எதிர்கொண்டிருப்பதாகவும், நாளை(01) அவர் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் ஒழுக்காற்று குழுவில் விசாரணைக்காக முன்னிலையாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேற்கிந்திய தீவுகள் அணியுடன் கடந்த மாதம் இடம்பெற்ற ஒருநாள் தொடரில் இரண்டாவது போட்டியில் தோல்வி கண்டதன் பின்னர், ரசிகர் ஒருவரை இழிவு செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே அவருக்கு எதிராக பல்வேறு சந்தர்ப்பங்களில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.   [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன்…

Read More