மக்களை சிரிக்க வைத்த நடிகர் தவக்கலைக்கு சினிமாவே எமனான கதை
(UDHAYAM, KOLLYWOOD) – அண்மையில் காலமான நடிகர் தவக்களை பற்றிய செய்திகள் ஒரு சிறிய செய்தியாக கடந்து போய்விட்டது. ஆனால் மக்களை சிரிக்க வைத்த அந்த கலைஞனை சினிமா சிரிக்க வைக்காமல் போய்விட்டது என்பதே உண்மை. அவரைப் பற்றி ஒரு சிறிய பார்வை… ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் நவாப்பேட்டைதான் சொந்த ஊர். 1975ம் ஆண்டு பிறந்த தவக்களையின் இயற்பெயர் சிட்டிபாபு. 3 அடி உயரம்தான் வளர்ந்தார். 3ம் வகுப்புவரைதான் படித்தார். அவர் நடிகர் என்பதை விட…