குருநாகல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள்
(UTV|KURUNEGALA)-2020ஆம் ஆண்டளவில் குருநாகல் மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை பூர்த்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் அசோக்க அபேசிங்க தெரிவித்துள்ளார். குருநாகலில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் பிரதி அமைச்சர் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். குருநாகல் நகரம் 50 லட்சம் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகிறது. புதிய சமிக்ஞை தொகுதிகள் பொருத்தப்பட்டுள்ளதுடன், ரயில் நிலையமும் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளது. கம்பெரலிய திட்டத்தின் கீழ் இவ்வாண்டு ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிற்கும் பத்து…