சமூக நன்மை கருதியே கட்சியின் பணிகள் அமைய வேண்டும்’ அனுராதபுரத்தில் அமைச்சர் ரிஷாட்
(UTV|COLOMBO)-சமூகத்தின் நன்மைகளுக்காகவே கட்சி இருக்க வேண்டுமேயொழிய, கட்சியின் நலனுக்காக சமூகத்தை பாழ்படுத்த முடியாதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மானின் வேண்டுகோளின் பேரில், அனுராதபுரம், கஹட்டகஸ்திகிலியவில் யுவதிகளுக்கான தையல் பயிற்சி நிலையமொன்றை கடந்த சனிக்கிழமை (05) திறந்துவைத்து உரையாற்றும் போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் ரிஷாட் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், கட்சியை விட சமூகத்தின் நிம்மதி,…