சய்டம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அரசு வெளியிட தாமதம்
(UTV|COLOMBO)-சய்டத்தை ரத்து செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தலை அரசு இன்னும் வெளியிடாமை பிரச்சினைக்குரிய ஒரு விடயமாகும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். சய்டம் மருத்துவ கல்லூரி தொடர்பான வழக்கிற்கு தீர்ப்பு வழங்கப்படும் வரையில் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட தாமதிப்பதாக தங்களுக்கு சந்தேகங்கள் எழுந்துள்ளதாக அச்சங்கத்தின் செயலாளர் டொக்டர் நலிந்த ஹேரத் தெரிவித்துள்ளார். அத்துடன் சய்டம் நெருக்கடியை தீர்ப்பது தொடர்பில் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளனர். [alert color=”faebcc”…