சிறைச்சாலை கைதிகள் மரணம் தொடர்பில் சிறைச்சாலைகள் ஆணையாளர் கைது
(UTV|COLOMBO)-2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா கைது செய்யப்பட்டுள்ளார். சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவை குற்றவியல் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளே கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார். இல 142, பேஸ்லைன் வீதி, கொழும்பு 9 இல் அமைந்துள்ள சிறைச்சாலை ஆணையாளரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்தே நேற்று (28) சிறைச்சாலைகள் ஆணையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார். …