சிறையில் வாடும் ஞானசார தேரருக்கான விதிமுறைகள்!!
(UTV|COLOMBO)-ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியை தூற்றி அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொது பல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் , கலகொடஅத்தே ஞானசார தேரர் நேற்று பிற்பகல் வெலிகடை சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டார். ஞானசார தேரருக்கு, ஹோமாகம நீதவான் நீதிமன்றம் நேற்று ஆறு மாதங்களில் கழிக்கும் வகையில் ஓராண்டுகால கடூழிய சிறை தண்டனை விதித்தது. ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொடவிற்கு அச்சுறுத்தல் விடுத்த குற்றத்திக்காக, பொதுபல சேனாவின் பொதுசெயலாளர் கலகொட அத்தே ஞானசார…