தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் சில குழுவினர் வீடுகளுக்கு

(UTV|கொழும்பு)- முப்படைகளின் கண்காணிப்பின் கீழுள்ள தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்து தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை நிறைவு செய்த மேலும் 252 பேர் இன்றைய தினம் வீடுகளுக்கு திரும்பவுள்ளனர். பூனானி மற்றும் பெல்வெஹெர ஆகிய தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்த குழுவினரே இவ்வாறு தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடுகளுக்கு திரும்பவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசங்க தெரிவித்தார். இதேவேளை, முப்படையினரின் கண்காணிப்பின் கீழுள்ள 43 தனிமைப்படுத்தல் முகாம்களில் சுமார் 4,387 பேர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More