திருத்த பணிகள் காரணமாக இரு தினங்களுக்கு நீர் விநியோகம் தடை
(UTV|COLOMBO)-பிரதான நீர்வழங்கல் குழாயில் மேற்கொள்ளவிருக்கும் திருத்த பணிகள் காரணமாக திருகோணமலை நகரம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் நாளை(07) மற்றும் நாளை மறுதினம்(08) நீர் விநியோகம் தடைப்படும் என திருகோணமலை நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபையின் திருகோணமலை அலுவலக பிராந்திய முகாமையாளர் தெரிவித்துள்ளார். தம்பலகமம் பிரதேசத்தல் இத்திருத்த பணி இடம்பெறவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அதன்படி, கிண்ணியா, திருகோணமலை நகரம் மற்றும் பட்டினமும் சூழலும், பாலையுற்று, தம்பலகமம், ஆண்டாங்குளம், சாம்பல்தீவு முதல் இரக்கண்டி வரை நாளை(07) காலை…