தூபி மீது ஏறி புகைப்படம் எடுத்த இரு இளைஞர்களுக்கு விளக்கமறியல்

(UTV|COLOMBO) மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் பழமையான தூபி ஒன்றின் மீது ஏறி புகைப்படம் எடுத்த இரண்டு இளைஞர்களையும் எதிர்வரும் 21ம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் 18 மற்றும் 20 வயதுடைய இரண்டு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.      

Read More