தெற்காசிய பிராந்தியத்தின் மதிப்பீட்டு சங்கிலிகளுடன் நெருக்கமாக ஒருங்கிணைப்பதற்கு இலங்கையை பரிந்துரைக்கிறோம்!
(UTV|COLOMBO)-அரசாங்கத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான தொலைநோக்கில் விவரித்துள்ளபடி ஏற்றுமதி தலைமையிலான தொழிற்துறைக்கு தொழில்மயமாக்கலுக்கான பொருத்தமான கொள்கைகளை மேம்படுத்துவதில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தனது செயற்பாடுகளை முன்னெடுத்து செல்கின்றது’ என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கடந்த 9ஆம் திகதி கொழும்பு 3 இல் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் துங்-லாய் மார்குக்கும் அமைச்சருக்குமிடையே இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். இச்சந்திப்பில் அமைச்சர் தொடர்ந்து கருத்து…