தேசிய சுற்றுச்சூழல் வாரத்தினை முன்னிட்டு கடற்படையினரினால் சுத்திகரிப்பு நிகழ்வுகள்

(UTV|COLOMBO)-தேசிய சுற்றாடல் வாரத்தினை முன்னிட்டு சூழல் பாதுகாப்பு மற்றும் சுத்திகரிப்பு நிகழ்வுகளை இலங்கை கடற்படையினர் முன்னெடுத்துள்ளனர். உலக சுற்றாடல் தினத்தை குறிக்கும் முகமாக தேசிய சுற்றுச்சூழல் வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு கடந்த மாதம் 30ஆம் திகதி முதல் இன்றுவரை இந்த சுத்திகரிப்பு நிகழ்வுகள் இடம்பெறுகின்றது. கடல்வள சூழல் பாதுகாப்பு திணைக்களத்தினால் (MEPA) நீர்கொழும்பு நீரேரிப்பகுதியை சுத்தப்படுத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்த இத் திட்டத்திற்கு கடற்படையினர் தமது உதவிகளை வழங்கியுள்ளனர். இந்த நிகழ்வில் 700 க்கும் மேற்பட்ட இராணுவம்,…

Read More