நாட்டின் பல இடங்களில் மின்சார விநியோகம் தடை
(UTV|COLOMBO)-மின்சார சபை பொறியலாளர்களால் முன்னெடுக்கப்படும் வரையறைக்கு உட்பட்டு கடமையாற்றும் போராட்டத்தினால், இன்றும் நாட்டின் பல இடங்களில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக அனுராதபுரம், பொலனறுவை ஆகிய மாவட்டங்களில் பல இடங்களிலும், கலுபோவில பகுதியிலும் இன்று காலை மின்சார விநியோகம் தடைபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 9ம் திகதி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நீண்டகால மின்னுற்பத்தி வேலைத்திட்டத்துக்கு பொதுபாவனைகள் ஆணைக்குழு இன்னும் அனுமதி வழங்காமைக்கு எதிராக இந்த போராடடம் முன்னெடுக்கப்படுகிறது. தங்களது கோரிக்கைக்கு அதிகாரிகள் இன்னும் உரிய பதிலை…