நாளை 18 மணி நேர நீர்வெட்டு
(UTV|COLOMBO)-களனி மற்றும் வத்தளை உள்ளிட்ட சில பிரதேசங்களில் நாளை முற்பகல் 9 மணி தொடக்கம் 18 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. குறித்த பிரதேசத்திற்கு நீரினை விநியோகிக்கும் பிரதான குழாயில் மேற்கொள்ளப்படவுள்ள புதுப்பித்தல் செயற்பாடுகள் காரணமாக இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி , களனி , பெஹலியகொடை , வத்தளை , மாபோல மற்றும் பியகம ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. [alert…