நேரடி முதலீடுகளை மேற்கொள்ள பிரிட்டன் தயார்
(UTV|COLOMBO)-இலங்கையில் கூடுதலான நேரடி முதலீடுகளை மேற்கொள்ள தமது நாடு தயாராக இருக்கிறதென பிரிட்டனின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான அமைச்சர் லியாம் ஃபொக்ஸ் தெரிவித்துள்ளார். இதற்கான வேலைத்திட்டம் எதிர்காலத்தில் அமுலாக்கப்படும் என திரு ஃபொக்ஸ் குறிப்பிட்டார். பொதுநலவாய இராஜ்ய தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக லண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடனான சந்திப்பில் அவர் கருத்து வெளியிட்டார். இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றது. நேற்றைய சந்திப்பில் இருதரப்பு வர்த்தக உறவுகளை மென்மேலும் வலுப்படுத்துவது பற்றி ஆராயப்பட்டது. இலங்கையில் நிலவும் முதலீட்டு…