இலங்கைக்கான நேரடி வெளிநாட்டு முதலீடு இந்த ஆண்டு அதிகரிக்கும்?
(UTV|COLOMBO)-இலங்கைக்கான நேரடி வெளிநாட்டு முதலீடு இந்த ஆண்டு 1.5 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலீட்டு சபையின் தலைவர் துமிந்தர ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இந்த தொகை கடந்த 2016ம் ஆண்டைவிட இரண்டு மடங்கு அதிகமாகும். எவ்வாறாயினும் புதிய வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முன்வருகை குறைவாகவே இருக்கிறது. ஏற்கனவே இலங்கையில் முதலீடு செய்துள்ளவர்களே தங்களின் முதலீட்டை விரிவாக்கவும், வெவ்வேறு துறைகளில் முதலீடுகளை மேற்கொள்ளவும் முனைவதாக அவர் தெரிவித்துள்ளார். எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH…