பல்கலைக்கழகங்களில் பகிடிவதைக்கு எதிரான சட்டம் உரியமுறையில் நடைமுறைப்படுத்தப்படும்
(UTV|COLOMBO)-பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைக்கு எதிரான சட்டம் உரியமுறையில் நடைமுறைப்படுத்தப்படும் என உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் சிரேஷ்ட மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கடந்த வருடத்தில் பகிடிவதை தொடர்பில் உயர்கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழகங்களில் 300 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த வருடமும் பகிடிவதை தொடர்பிலான பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். கடந்த நாட்களில் ருகுணு பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபட்ட…